இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ. 1000 கோடி வசூல் சாதனை புரிந்த படம் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல். இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. அதன்பிறகு கன்னட சினிமாவில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் 1200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் ஆயிரம் கோடி வசூல் சாதனை பட்டியலில் இன்னும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா படங்கள் மட்டும் தான் இடம் பெறவில்லை.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் அந்த படம் 1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் மற்றும் ரஜினி நடிக்கும் ஜெயிலர், தளபதி விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் லியோ போன்ற படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகரின் படம் முதலில் ஆயிரம் கோடி வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.