இந்தியா போஸ்ட் GDS முடிவுகளானது  indiapostgdsonline.gov.in என்ற இணையப்பக்கத்தில்  வெளியிடப்பட்டது. ஆகவே விண்ணப்பித்தவர்கள் தங்களின் முடிவுகளை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்துக்கு சென்று தங்களின் மெரிட் லிஸ்டை தெரிந்துகொள்ளவும். தற்போது இந்தியா போஸ்ட் GDS முடிவுகள் 2023 பதிவிறக்கும் வழிமுறை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். அதன்படி, indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு முகப்பு பக்கத்தில் அனைத்து வட்டங்களுக்கும் கிடைக்கக்கூடிய ரிசல்ட் பட்டியலை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் உங்களின் மாநிலத்தில் கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது புது pdf கோப்பு திறக்கும். அடுத்ததாக விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்க வேண்டும். தகுதிப் பட்டியலை பதிவிறக்கி உங்களுடன் ஒரு நகலை வைத்திருக்க வேண்டும். இந்த பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும் மார்ச் 21 அன்று (அ) அதற்கு முன் அவர்களின் பெயர்களுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு தலைவர் வாயிலாக தங்களின் ஆவணங்களைச் சரிபார்க்கவும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அசல் மற்றும் 2 செட் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை வெரிபிகேஷனுக்கு எடுத்து செல்ல வேண்டும்.