ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்குள் கெத்தாக நுழைந்தது.

இந்த முக்கியமான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து அவர் வெற்றியை முடித்து வைத்த விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெறாது என்று தொடக்கத்திலிருந்தே கூறி வந்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், தற்போது தனது கருத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்ட அமீர், அதில் பின்வருமாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியா அரை இறுதிக்கு வராது என்று நான் கூறியது எனது தனிப்பட்ட கணிப்பு மட்டுமே. சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்திய அணி இன்னும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஃபார்மில் இல்லை. பேட்டிங் வரிசையும் நெருக்கடியான நேரங்களில் நிலைகுலைந்து போகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hasna Mana Hai (@geohasnamanahai)

மேலும், அரை இறுதியில் பலமான இங்கிலாந்து அணியை இந்தியா சந்திக்க உள்ளதால், இம்முறை இந்தியா இறுதிப்போட்டிக்குச் செல்லாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரை இறுதிப் போட்டிகள். மேலும் மார்ச் 5-ம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதும் அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.