2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கணித்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய அணி தனது குழுவில் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் தோல்வியடைந்து வெளியேறும் எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிவைச் சந்தித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமீர், தற்போது விளையாடி வரும் போக்கைப் பார்த்தால் தென்னாப்பிரிக்காவும், மேற்கிந்திய தீவுகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் தகுதியைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“>

இந்தியத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா குறித்துப் பேசிய அமீர், அவரை ஒரு ‘ஸ்லாக்கர்’ (சோம்பேறி) என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக அபிஷேக் சிறந்த வீரர் அல்ல என்றும், சர்வதேச கிரிக்கெட்டில் நிலவும் அழுத்தத்தை அவர் சரியாகக் கையாள்வதில்லை என்றும் சாடினார்.

“அபிஷேக் ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு விரட்ட நினைக்கிறார், ஆனால் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பலவீனத்தை எளிதில் அம்பலப்படுத்திவிடும்” எனக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் சைம் அயூப் ஆரம்பக்காலத்தில் சந்தித்த அதே தொழில்நுட்பக் கோளாறுகளை அபிஷேக் எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக ஆஃப்-சைடு பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் அவருக்கு இருக்கும் பலவீனத்தை உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் எளிதில் பயன்படுத்தி அவரை வெளியேற்றி வருவதாகவும் அமீர் சுட்டிக்காட்டினார்.