ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இதில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்  ரச்சின் ரவீந்தரா தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த நிலையில் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியா சிறந்த அணி என்று  இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டி இருக்கிறார்.

எனவே விமர்சிக்காமல் எதிரணிகளால் முடிந்தால் இந்தியாவை துரத்தி வெற்றிகளை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது என்னவென்றால்,” நேர்மையாக சொல்ல வேண்டும் எனில் மற்ற அணிகளை காட்டிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த அணியாக இந்தியா இருக்கிறது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் டி20 உலக கோப்பை சாம்பியன் டிராபி வைத்திருக்கிறார்கள் தற்போது மற்றவர்கள் அவர்களை பிடிக்க முயற்சிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.