நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தன்னைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதைக் கண்டித்து, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (MP) அர்ச்சுனன் இராமநாதன் வெளியிட்டுள்ள ஆக்ரோஷமான வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வெடி குண்டாய் மாறியுள்ளது. அதில் பேசிய அவர், “அண்ணன் சீமான் என்னைப்பற்றிப் பிரபலமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய நல்ல நேரம் அவர் இந்தியாவில் இருக்கிறார்.

என்னால் இந்தியாவிற்கு வரும்போது ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வர முடியாது; அப்படி மட்டும் கொண்டு வர முடிந்திருந்தால் நான் அண்ணன் சீமானைச் சுட்டுக் கொன்றிருப்பேன். இந்திய மக்கள் நல்லவர்கள், நீ தேசியம் பேசுவதால் உன்னை நம்புகிறார்கள். நீ மட்டும் யாழ்ப்பாணம் வந்திருந்தால் உன்னைச் சுட்டிருப்பேன் அல்லது வெடி வச்சுத் தூக்கியிருப்பேன்” என்று நேரடி மரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​மேலும் சீமானின் அரசியல் நிதியுதவி குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்பி அர்ச்சுனன், “நீ இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறாய், அங்கேயே இருந்து கொள். நிதி வேண்டி வாங்கிச் சாப்பிடு, மலம் கழி, அப்படியே இருந்து கொள். ஆனால், எங்கள் இனத்தை விற்காதே; எங்கள் வலிகளை விற்காதே! அங்கே எங்கள் தந்தை இறந்திருக்கிறார், எங்கள் தாய் இறந்திருக்கிறார்.

எங்கள் வலிகளை விற்றுப் பிழைக்காதே, அவ்வளவுதான் நான் கேட்டுக்கொள்வது. தாராளமாகத் திரள் நிதி வாங்கிக் கொள், உன்னுடைய பைகளை நிரப்பிக் கொள்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கை எம்பியின் இந்த பகீர் கொலை மிரட்டல் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் உலகத் தமிழர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி, பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.