இந்தியாவில் முகலாய அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்கு படைத்தளபதியாக அப்சல் கான் இருந்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில்  மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி  ஆட்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் அவரை  தாக்க சூழ்ச்சி நடந்தது. இதையறிந்த சிவாஜி தன்னை தாக்க வந்த அப்சல் கானை தன்னிடம் இருந்த புலி நகத்தை கொண்டு தாக்கினார். இந்த போரில் அப்சல் கான் உயிரிழந்துள்ளார். இதில் பயன்படுத்தப்பட்ட புலி நகம் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்திற்கு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதனை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்ற நிலையில் புலி நகம் 3 ஆண்டு காலத்திற்கு இந்தியாவில் வைக்க அனுமதி வழங்கியுள்ளனர். இந்தியாவில் சிவாஜி முடிசூட்டி மன்னராக ஆட்சி செய்து  350 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதை கொண்டாடும் விதத்தில்  இந்தியாவிற்கு புலிநகம் இன்று கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.