இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள தனது அனுபவம் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் உண்மையான நிலையை மறைத்து, விளம்பரங்களில் காட்டப்படும் கவர்ச்சிகரமான பிம்பங்கள் குறித்து அவர் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் உண்மையில் இல்லாத விஷயங்களை ஏன் விளம்பரங்களில் காட்டுகிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறிப்பாக, சுற்றுலாத் தலங்களில் நிலவும் அதீத கூட்டம், தூய்மையின்மை மற்றும் அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டு அவர் ஏமாற்றமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக இந்தியா ஒரு ‘மாய உலகமாக’ சித்தரிக்கப்படுவதாகவும், ஆனால் தரையில் உள்ள யதார்த்தம் முற்றிலும் வேறாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by JACK HEATON | TRAVEL ENTHUSIAST (@jack_ofalljourneys)

“>

இதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இவரது இந்தக் கருத்து, இந்தியச் சுற்றுலாத் துறையின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு நாட்டின் உண்மையான அழகை மட்டும் காட்டாமல், அங்குள்ள சவால்களையும் நேர்மையாக முன்வைக்க வேண்டும் என்பதே இந்தப் பயணியின் முக்கிய ‘வாக்குமூலமாக’ அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைப் பிரதிபலிக்கிறது.