
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏவியன் இன்ஃப்ளுயன்சா என்று அழைக்கப்படும் அரியவகை பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அரியவகை நோய் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2-ம் முறையாக மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அரியவகை நோய் குழந்தையின் வீட்டிற்கு அருகே உள்ள கோழிப்பண்ணையில் இருந்து பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியவகை பறவை காய்ச்சல் பாதிப்பு பரவுவதை தடுக்க இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.