இந்தியாவில் 2021 ஆம் வருடத்தில் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கையானது தற்போது 90% சதவீதம் அதிகரித்து 8.71 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இது தொடர்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு 2025 அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் 1.78 லட்சம் கோடிஸ்வர குடும்பங்களை கொண்ட மாநிலமாக மராட்டியம் இருக்கிறது. இதேபோல் டெல்லியில் 79,800, தமிழகம் 72,600, கர்நாடகா 68,800, குஜராத் 68,300 போன்றவை முதல் 5 இடங்களை பிடித்திருக்கிறது. இதற்கிடையில் டிஜிட்டல் பணம் செலுத்துதல், பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளை கோடீஸ்வரர்கள் அதிகம் விருப்பப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
