இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் மின்னணு முறையில் பணத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்ப முடிகிறது. இதன் காரணமாக யுபிஐ செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண கடைகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்பாடு உள்ளது.

தற்போது இந்தியாவின் யு பி ஐ செயலி சிங்கப்பூர், பூட்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்த சேவை தற்போது பிரான்ஸ் நாட்டிலும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்சைத்தொடர்ந்து தற்போது இலங்கையிலும் இந்தியாவின் யு பி ஐ பணப்பரிவினை சேவை அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.