இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மோசமான ஆட்டத்திறன் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் காரணமாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தனது வீரர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில் சுமார் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

குரூப் சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததே, இந்த அபராத நடவடிக்கைக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சூப்பர் 8 சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியதால், ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வீரர்களைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் மார்ச் 4 (முதல் அரையிறுதி): நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா

மார்ச் 5 (இரண்டாவது அரையிறுதி): இந்தியா vs இங்கிலாந்து

இறுதிப்போட்டி வருகிற மார்ச் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.