பாகிஸ்தானை சேர்ந்த மசோத் ரஹ்மான் உஸ்மானி என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சன்னி உலாமா சபையின் துணை செயலாளராக பொறுப்பு வகித்த இவரை கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுட்டு கொலை செய்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையும் பொறுப்பேற்காத நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமாபாத் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உஸ்மானியின் இறுதி பயணத்தில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்கள் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.