டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் சில காட்சிகள் சென்னை விமானம் நிலையத்தில் படமாக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன்-2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளை சித்தார்த் துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இந்த படத்தின் அடுத்தத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.