தமிழ் சினிமாவில் முன்னணி டைரக்டராக வலம் வரக்கூடிய லோகேஷ் கனகராஜ், இப்போது தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்குகிறார். அண்மையில் லோகேஷ் பேட்டி அளித்தபோது “தான் 10 படம்தான் இயக்குவேன். அதன்பின் திரைத்துறையில் இருந்து விலகி விடுவேன் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் லோகேஷை போன்று பிரபல டைரக்டர் ஹெச். வினோத்தும் இதே முடிவில் இருக்கிறாராம். கடைசியாக துணிவு என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த ஹெச்.வினோத் அடுத்ததாக கமலை வைத்து படம் இயக்க உள்ளார். இவரும் மொத்தம் 10 படங்கள் மட்டுமே இயக்கி விட்டு திரைத்துறையில் இருந்து விலக முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.