வேலை முடிந்து பல மாதங்களாகியும் ஊதியம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் ஒருவர், தான் கட்டிய கட்டிடத்தையே சுத்தியலால் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு அழகான கட்டிடத்தின் உட்பகுதியை அந்த நபர் ஆவேசத்துடன் சேதப்படுத்துவதும், குறிப்பாக செடிகளுக்காக வைக்கப்பட்டிருந்த எல்லைச் சுவர்களை இடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் கடினமாக உழைத்தும் உரிய பணம் கிடைக்காத விரக்தியில் அவர் இத்தகைய முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஒப்பந்ததாரரின் மனநிலையைப் புரிந்துகொள்வதாகவும், செல்வந்தர்கள் ஏழைத் தொழிலாளர்களை அலைக்கழிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“>

அதேசமயம், இது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்றும், பணத்திற்காக இவ்வாறு சொத்துக்களைச் சேதப்படுத்துவது சரியல்ல என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எப்படியிருப்பினும், உழைப்புக்குரிய ஊதியம் மறுக்கப்படும்போது எழும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.