ஆண்டுக் கணக்கில் வேலை தேடி அலைந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த இளைஞர்களுக்கு, இணையத்தில் வைரலாகி வரும் ’15 நாட்கள் ஃபார்முலா’ ஒரு புதிய நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளது.
வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் கடுமையான போட்டியால் எண்ணற்ற பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த எளிய உத்தி ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான முறைகளில் வேலை தேடுவதை விட, திட்டமிடப்பட்ட இந்த 15 நாள் அணுகுமுறை குறுகிய காலத்தில் நேர்காணல் வாய்ப்புகளைப் பெற உதவுவதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த 15 நாள் ஃபார்முலாவின்படி, வேலை தேடுபவர்கள் முதல் சில நாட்களில் தங்களது பயோடேட்டாவை தற்போதைய சந்தை தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, லிங்க்டு இன் போன்ற தொழில்முறை சமூக வலைத்தளங்களில் தங்களது சுயவிவரங்களை மேம்படுத்தி, குறிப்பிட்ட துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்குத் தகுந்த கவர் லெட்டருடன் விண்ணப்பிப்பது மற்றும் தங்களின் திறன்களைச் சுருக்கமாக வெளிப்படுத்துவது போன்ற தெளிவான இலக்குகளுடன் செயல்படுவதே இந்த முறையின் முக்கிய அம்சமாகும்.
ஒழுக்கமான திட்டமிடலும் தொடர்ச்சியான முயற்சியும் இருந்தால் வேலை தேடும் பயணத்தை மிக எளிதாக மாற்ற முடியும் என்பதை இந்த வைரல் முறை நிரூபித்துள்ளது. இந்த உத்தியைப் பின்பற்றிய பலருக்குக் குறுகிய நாட்களிலேயே நேர்காணல் அழைப்புகள் வந்திருப்பதாக இணையத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருவதால், வேலை தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
இந்நிலையில் சரியான திசையில் சரியான உத்திகளோடு முயற்சி செய்தால் வேலைவாய்ப்பைப் பெறுவது சாத்தியமே என்பதற்கு இந்த 15 நாள் ஃபார்முலா ஒரு சிறந்த உதாரணமா திகழ்கிறது.
बंदे ने बताया लोगों के सालों तक बेरोजगार रहने का कारण pic.twitter.com/J853MiCbeL
— Viral Beast (@kumarayush084) July 25, 2026
“>
