வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேசினார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தனக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அதிபர் டிரம்ப்பிடம் மச்சாடோ வழங்கியுள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் வீழ்ச்சிக்கு டிரம்ப் காட்டிய தனித்துவமான அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாகவே இந்த உயரிய விருதை அவருக்கு வழங்குவதாக மச்சாடோ தெரிவித்தார்.
REPORTER: “Did you offer to President Trump your Nobel Peace Prize?”
MARÍA CORINA MACHADO: “I presented the President of the United States the medal…the Nobel Peace Prize.”
“Two hundred years ago, General Lafayette gave Simón Bolívar a medal with George Washington’s face on… pic.twitter.com/xR69XpQCk8
— Fox News (@FoxNews) January 16, 2026
“>
இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இது பரஸ்பர மரியாதைக்குரிய ஒரு அற்புதமான செயல் எனப் பாராட்டியுள்ளார். முன்னதாக, பல உலக நாடுகளின் போர்களை நிறுத்தியதால் தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என டிரம்ப் பலமுறை கூறி வந்த நிலையில், நோபல் கமிட்டியின் விதிகளின்படி இந்த விருதைப் பரிமாறிக் கொள்ள முடியாது என்ற எச்சரிக்கையையும் மீறி மச்சாடோ இத்தகைய முடிவை எடுத்துள்ளது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
