ஹாங்காங்கில் முதன்முதலாக பிறந்த ராட்சத பாண்டா இரட்டையர்கள் ஜியா ஜியா, டி டி வெள்ளிக்கிழமை தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடின. 2024 ஆகஸ்ட் 15 அன்று பிறந்த இவை, ஒரு வருடத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று, இந்த அழகான பாண்டாக்களை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.

“>

 

ஜியா ஜியா, டி டி ஆகியோர் 2007-ல் சீன அரசு ஹாங்காங்கிற்கு பரிசாக வழங்கிய யிங் யிங், லீ லீ பாண்டாக்களின் குட்டிகள். தற்போது ஆன் அன், கே கே என 2024-ல் பரிசளிக்கப்பட்ட மற்ற பாண்டாக்களும் சேர்ந்து, ஹாங்காங்கில் மொத்தம் ஆறு ராட்சத பாண்டாக்கள் வாழ்கின்றன. இதனால், சீனாவைத் தவிர்த்து, பாண்டாக்களுக்கு மிகப்பெரிய தாயகமாக ஹாங்காங் திகழ்கிறது.

“>

 

பிறந்தநாள் விழாவில், பாண்டாக்களுக்காக பெரிய டிம் சம் ஸ்டீமர், பீச் வடிவ இனிப்புகள் போன்றவை வைத்து விருந்து அளிக்கப்பட்டது. “இது ஹாங்காங்கிற்கே ஒரு பெரிய கொண்டாட்டம்” என்று சுற்றுலா வாரியத் தலைவர் பீட்டர் லாம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பாண்டா ரசிகர்கள் சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்தியதும், இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கியது. இதே நேரத்தில், சிக்கிம் இமயமலை விலங்கியல் பூங்காவில், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சிவப்பு பாண்டா குட்டிகள் பிறந்தது கூட சிறப்பு செய்தியாகியுள்ளது.