தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளைப் பதிவிட்ட திமுக ஆதரவாளர் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சரை அவதூறாகச் சித்தரித்து வீடியோக்களைப் பதிவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறிப்பாக, கோவையில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தச் செயலைத் தொடர்ந்து, ஜேம்ஸ் ராஜா மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ‘ திருநெல்வேலி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் கண்ணியமற்ற முறையில் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
