முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, கூட்டுக்குடும்பமாக இருந்து பிரிந்து தனியாகக் குடித்தனம் செல்லும் ஏழைத் தம்பதிகளுக்கு, அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தம்பதிகள் தங்களுக்கு என்று ஒரு நிரந்தரமான கூரை இல்லாத நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வாக்குறுதி குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதிதாகத் திருமணமான தம்பதிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே தனது நோக்கமெனக் குறிப்பிட்டார்.
இதனால் தங்குவதற்கு முறையான இடமில்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் அல்லது ஓலைக் குடிசைகளில் வாழும் தம்பதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும் என இந்தத் திட்டத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
