சமூக வலைதளங்களில் அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு காணொளி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. ஒரு மசூதிக்குள் இமாம் (மதகுரு) ஒருவர் சொற்பொழிவு ஆற்றியபோது, எதிர்பாராதவிதமாக ஓர் ஆக்ரோஷமான காளை உள்ளே நுழைந்த சம்பவம் இந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. மசூதியில் இருந்த மற்றவர்களும் இமாமின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென காளை ஒன்று ஓடி வந்து இமாமுக்கு நேர் எதிரில் வந்து நின்றது.
View this post on Instagram
“>
அந்தக் காளை இமாமைத் தாக்கி, காயப்படுத்தி விடுமோ என்று அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். ஆனால், அங்கு நடந்த காட்சி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காளை யாரையும் காயப்படுத்தாமல், இமாமின் முன் சிறிது நேரம் நின்றுவிட்டு, பின்னர் அமைதியாக திரும்பிச் சென்றது. hafiz_aamir_baramulla என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை நெட்வாசிகள் பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சிலர், இது செயற்கை நுண்ணறிவின் (AI) கைவண்ணமாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
