சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை விரிவாக்க விழாவில், 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இந்த அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் அமைச்சரவையில் இளம் தலைமுறையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இன்று முதல் ‘Gen Z’ தலைமுறை அதிகாரத்தைப் பழகப்போகிறது.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கப்போவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும்; இந்த மாற்றங்களுக்கெல்லாம் முதலமைச்சர் ஜோசப் விஜயே காரணம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதன்மையாக ஒலிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.