2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.

காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெரிப்பதை கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். வரி உயர்வு மட்டும் இந்த ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பட்ஜெட். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு, இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் உதவித்தொகை என்று கூறுகின்றனர் என்று இபிஎஸ் குற்றசாட்டினார்.