காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலக வளாகத்தில் அலுவலக ஆய்வு கூட்டம் தொடங்கியது.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும். மார்ச் 28 முதல் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.