தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை பட்ஜெட் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு பேசிய நிதியமைச்சர் நாகூர் தர்காவை புதுப்பிக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 16,500 மெகா வாட் மின் திறன் கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். காற்றாலைகளில் செயல் திறனை மறு சீரமைக்க புதிய கொள்கை வகுக்கப்படும். மேலும் மின் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும் என்று கூறினார்.