2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.

காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலக வளாகத்தில் அலுவலக ஆய்வு கூட்டம் தொடங்கியது. பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை, பாமக எம்எல்ஏ ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.