தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு நிதியமைச்சர் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது எந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ. 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு உயர் கல்வித்துறைக்கு‌‌ ரூ. 6,967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 1444 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வனம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ரூ. 1248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.