2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.

காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் அதனை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, நகர்ப்புற வளர்ச்சி-ரூ.38,444 கோடி, ஊரக வளர்ச்சி-ரூ.22,562 கோடி, நெடுஞ்சாலைகள்-ரூ.19,465 கோடி, போக்குவரத்து-ரூ.8,056 கோடி, நீர்வளம்-ரூ,8,232 கோடி, பழங்குடி-ரூ.3,513 கோடி, எரிசக்தி-ரூ.10,694 கோடி, காவல்-ரூ.10,812 கோடி, மக்கள் நல்வாழ்வு-ரூ.18,661 கோடி, கல்வி-ரூ.47, 266 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.