இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அமைதியாக இருந்த ஒரு வளர்ப்பு பூனை அதன் உரிமையாளரை எந்தவித வெளிப்படையான காரணமும் இல்லாமல் திடீரென தாக்குகின்றது.

பூனைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரு நபர் வீட்டிற்குள் குளிர்சாதன பெட்டியை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்துகின்றார். அப்போது திடீரென அங்கு இருந்த பூனை அதன் உரிமையாளரை தாக்குகின்றது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு அந்த உரிமையாளர் ஓடுகின்றார். இருந்தாலும் அந்த பூனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் அவர் ஒரு கதவுக்கு பின்னால் மறைந்து கொண்டார். அப்போது அது தொடர் தாக்குதலை கொடுக்க அதனை மற்றொரு அறைக்கு தள்ளி ஒரு ஸ்கிரீனை இழுத்து விட்டு அதன் தாக்குதலில் இருந்து அவர் தப்பித்து விட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.