பொதுவாக நாய் என்றால் பத்து முதல் 15 வயது வரை தான் வாழும். ஆனால் நாய் ஒன்று முப்பது வருடங்கள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரை உலகில் வாழ்ந்த நாய்களிலேயே இந்த நாய் தான் மிக வயதான நாய் என்று கூறப்படுகிறது. இதற்கு கின்னஸ் சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. பாபி என்ற அந்த நாய் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தது.

இதனுடைய வயது 30 வருடங்கள். இந்த நாய்க்கு தற்பொழுது வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடக்க சிரமப்படும். ஆனால் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னதாக தெரிவித்துள்ளார்கள்.

https://twitter.com/i/status/1620936535188340737