தற்போதைய காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடலில் அதிக கொழுப்பு, மன அழுத்தம், ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், உடல் எடை அதிகரித்தல், கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அதிகம் சாப்பிடுதல் போன்றவை தான் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட காரணமாக அமைகிறது.

இதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மாத்திரைகள் மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்றாலும் உணவு பழக்க வழக்கங்களிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

 

  • உயர் அழுத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்ட பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
  • புகைப்பழக்கத்தையும் மது பழக்கத்தையும் அடியோடு தவிர்த்து விட்டால் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுத்துவிடலாம்.
  • உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் குறைந்தது 30 நிமிடங்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதும் காய்கறி ஜூஸ் பருகுவதும் பலன் கொடுக்கும்.
  • செலரி என்று கூறப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைப்பதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
  • ஒரு வாரத்தில் மூன்று முறை மீன் உணவுகளை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.