சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக் வெடித்துச் சிதறிய வீடியோ ஒன்று தற்போது இணையவாசிகளைத் திகைக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@vikramgfans) பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு நபர் தனது பிறந்தநாளை உறவினர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது தெரிகிறது. தலையில் காகிதக் கிரீடம் அணிந்து அவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, அருகிலிருந்த உறவினர் ஒருவர் கேக் மீதுள்ள மெழுகுவர்த்தியைத் தீக்குச்சியால் ஏற்றுகிறார். மெழுகுவர்த்தி எரிந்த அடுத்த விநாடியே, யாரும் எதிர்பாராத விதமாக அந்த கேக் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கேக்கின் துண்டுகள் அந்த அறையெங்கும் சிதறியதுடன், பிறந்தநாள் கொண்டாடிய நபரின் முகம் முழுவதும் கேக் பூசப்பட்டு உருக்குலைந்தது.
View this post on Instagram
சாதாரணமாக ஒரு கேக் மெழுகுவர்த்தி ஏற்றும்போது வெடிக்க வாய்ப்பில்லை என்பதால், இது ஒரு திட்டமிடப்பட்ட ‘பிராங்க்’ (Prank) வீடியோவாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கேக்கிற்குள் சிறிய அளவிலான பட்டாசு அல்லது வெடிபொருள் ஏதேனும் வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இது பர்த்டே கேக் அல்ல, பர்த்டே பாம் (Bomb)” என்றும், “இதனால்தான் தரமான கடைகளில் கேக் வாங்க வேண்டும்” என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அந்த நபரின் முகத் தோற்றத்தைக் கண்டு வேடிக்கையான கமெண்ட்களைத் தட்டி விடுகின்றனர். மேலும் மகிழ்ச்சியாகத் தொடங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம், கண்ணிமைக்கும் நேரத்தில் அதிர்ச்சியில் முடிந்த இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
