
தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் , அங்கு பிரசாரத்தில் பேசிய அமித்ஷா, தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவரும் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார். ம.பி. தேர்தலிலும் இதேபோல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.