ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்கொண்ட மாற்றங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, 30 ஓவர்கள் கடந்த போதும் இந்தியா 150 ரன்கள் கூட எடுக்காத சூழ்நிலையில், அனுபவமிக்க கே.எல். ராகுலுக்கு பதிலாக அக்சர் படேலை 5வது இடத்தில் அனுப்பியதைக் கண்டித்து ரசிகர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

“>

 

ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடையிலான நூறு ரன்கள் கூட்டணி இந்திய அணிக்குச் சிறிதளவு நிலைத்துவைத்தாலும், அதன் பின்னர் நடந்த வீழ்ச்சிக்கு கம்பீர் எடுத்த உத்திகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. ரோஹித் 73 ரன்கள் எடுத்துத் தன்னுடைய 59வது அரைசதத்தை பதிவு செய்தாலும், மிட்செல் ஸ்டார்க்கின் சுழற்சி மற்றும் ஆடம் ஜம்பாவின் சுழற்பந்து ஆட்டம் இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக கே.எல். ராகுலை புறக்கணித்து அக்சர் படேலை முன்னிலைப்படுத்தும் கம்பீரின் யோசனையை விமர்சகர்கள் “தெரிந்த தவறு” எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

“>

 

இடது கை – வலது கை பேட்டிங் கூட்டணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்றாலும், அதற்கான நேரமும் சூழ்நிலையும் பொருத்தமாக இல்லை என்கிறார்கள். ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கம்பீரின் அணிச் சூழ்நிலை மாற்றங்களை “வித்தியாசமான – ஆனால் விளைவில்லாத” உத்தியாகக் கண்டுள்ளனர்.

அதே நேரத்தில், ரோஹித் சர்மா அடிலெய்டில் அழுத்தத்தில் வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் நம்பிக்கையை மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது