நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதாவது தன்னுடன் உறவு வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அவர் புகார் கொடுத்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 12 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் அதற்குள் நடிகை மற்றும் சீமான் தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் இடைப்பட்ட காலத்தில் செட்டில்மெண்ட் வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, இது ஆதாரம் இல்லாத அவதூறு என்று பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நன்றாக தெரியும். இது தொல்லை இதனை 15 வருடங்களாக இழுப்பது நல்லது கிடையாது. இதனால் இந்த வழக்கை நானே உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தேன். இந்த வழக்கை முழுவதுமாக விசாரித்தால் இது அவதூறு திட்டமிட்ட பொய் வீண் பழி என்பது தெரிய வரும். மேலும் இந்த விவகாரத்தில் உடன்பாட்டுக்கு வாய்ப்பு கிடையாது. அதற்கான தேவையும் இல்லை என்று கூறினார்.