நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய நிலையில் அதனை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கிழிக்க சீமான் வீட்டு காவலாளிகள் போலீசாரை தாக்க என அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு நடிகை பாலியல் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு சீமான் பெண்கள் பற்றி இழிவாக பேசியதும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, வீட்டில் சம்மனை கொடுத்திருக்கலாம். அதனை இவ்வளவு பெரிய விஷயமாக மாற்றி இருக்க தேவையில்லை. நேர்மையான முறையில் அரசு அதிகாரி இந்த விஷயத்தை கையாண்டிருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு பெண்கள் பற்றி சீமான் இழிவாக பேசியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பெண்கள் பற்றி சீமான் பேசிய வீடியோவை நான் இன்னும் சரியாக பார்க்கவில்லை என்று கூறினார்.
