இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவோர் எண்ணிக்கை அதிகம். இந்த ரீல்ஸ் வீடியோவுக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு வாலிபர் கெத்து காட்டுவதற்காக ராக்கெட் பட்டாசை தன்னுடைய வாயில் வைத்து கொளுத்தினார். இதனை அங்கிருந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ந்த நிலையில் திடீரென ராக்கெட் பட்டாசு வாலிபரின் முகத்தை நோக்கி திரும்பியது. இதனால் ஒரு நிமிடம் அவர் பதறிப் போய்விட்டார். அவரின் முகத்தில் தீக்காயங்களும் ஏற்பட்டது. மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எப்போது ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என பலரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C9j0nS9NcaM/?igsh=ODd6dG1tMjF4bDRv