இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதே நேரத்தில் எதார்த்தமாக நடக்கும் சில சம்பவங்களை வீடியோ எடுத்து போடும்போது அது எதிர்பாராத விதமாக வைரல் ஆகிவிடுகிறது. இருப்பினும் லைக் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்து வருகிறது.

இருப்பினும் அந்த ஆபத்தை உணராமல் ரிஸ்க் எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வாலிபர் ஒருவர் கரண்ட் கம்பியை பிடித்துக் கொண்டு புஷ் அப் எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் ஒரு வேலை கரண்ட் மட்டும் ஷாக் அடித்தால் உயிரே போய்விடும். இந்த இளைஞர் செய்வது மிகவும் ஆபத்து என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by FitnessHaven (@fitnesshaven_official)