
ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு 100 முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மனைவி தொலைபேசி அழைப்பை எடுத்தவுடன் கட் செய்து விடுவாராம். வெவ்வேறு புதுப்புது எண்களிலிருந்து அந்த நபர் தனது மனைவிக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அவரது மனைவி வீட்டில் இருக்கும் சமயத்திலும் அந்த நபரது தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்திலும் அழைப்பு வராததால் தனது கணவனின் மீது அந்த பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்து விட்டார். அதோடு தனது கணவன் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் தான் இத்தனை முறை தொலைபேசியில் அழைத்தார் என்பது தெரிய வந்தது. இதற்கு அவரிடம் காரணம் கேட்டபோது தனது மனைவியை அதிகம் நேசிப்பதாக கூறியுள்ளார்.