
மனைவி பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டும். அது எங்கே தெரியுமா? நியூசிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மனைவியின் பிறந்தநாளை நீங்கள் மறந்துவிட்டால் முதல் முறை எச்சரிக்கைப்படுவார்கள். அதுவே இரண்டாவது முறை தொடர்ந்தால் அபராதம் (அ) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் இந்தியாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமோவாவில் மட்டும் இது போன்ற வினோதமான சட்டங்கள் இல்லை. உலகில் பல்வேறு நாடுகளில் இது போன்ற சட்டங்கள் இருக்கிறது. பல நூதன சட்டங்களுக்கு பெயர்போன வட கொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வெளியில் சென்றால், அது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. அதோடு அரச குடும்பத்தினரின் நினைவு நாளின் போது மக்கள் சிரிக்கவும், வெளியில் செல்லவும், மது அருந்தவும் தடைவிதிக்கப்படும்.