சீனாவின் யுகான் மாகாணத்தில் சென் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6 தேதி மண்டபத்தில் வைத்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம்பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி கொண்டு கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கையில் வைத்த பேனரில் “நான் சென்னின் முன்னால் காதலி” என்று எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்ட விருந்தினர்கள் ஆர்வத்துடன் அவர்களிடம் சென்று விசாரிக்க தொடங்கினர்.

இதில் “பெண்களை ஏமாற்றாதீர்கள். அவர்களிடம் எப்பொழுதும் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க நினைத்தால் உங்களின் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள்” என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் மாப்பிள்ளையான சென்னும் அவருடைய வருங்கால மனைவியும் அந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சென் தன்னுடைய முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கூறினார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது “பெண்களின் எதிர்ப்பால் நான் கோபப்படவில்லை. கடந்த காலத்தில் நான் ஒரு கெட்ட காதலனாக இருந்துள்ளேன். நான் இளமை ஆக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் செய்த செயலே இதற்கு காரணம். மேலும் நான் பல பெண்களை காயப்படுத்தியுள்ளேன். நீங்கள் யாரும் அவ்வாறு செய்யாமல் உங்களுடைய காதலியிடம் உண்மையாக இருங்கள்” என்று கூறியுள்ளனர்.