சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதன் பிறகு நடிகர் ஜிவி பிரகாஷ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாணவிகளுக்கு துணையாக தான் இருப்பதாக கூறினார்.

இதேபோன்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமாண விஜயும் இந்த சம்பவத்திற்கு கண்ணம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சிபி சத்யராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள x பதிவில், திரும்பத் திரும்ப குற்றம் செய்பவர்களால் சமுதாயத்திற்கு அவமானம். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தப்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மரண தண்டனை காலத்தின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் துணிச்சலாக புகார் அளித்த மாணவிக்கு சல்யூட் என்று பதிவிட்டுள்ளார்.