பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்ற நிலையில் இன்று காலை இந்தியா திரும்பினார். இதில் ஆஸ்திரியா பயணம் தொடர்பாக தன்னுடைய x பக்கத்தில் பிரதமர் மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தப் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. நமது தேசங்களுக்கு இடையேயான நட்புறவு வளர்ந்துள்ளது. வியன்னாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறப்பாக வரவேற்ற ஆஸ்திரியா அரசுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் 40 வருடங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறை. மேலும் ஆஸ்திரியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது திடீரென ஆஸ்திரேலியா என்று கூறினார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஆஸ்திரியா என்று அழுத்தி கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு கம்பெனி கிடைத்துவிட்டது என பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.