ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழா இன்று மிக கோலாகாலமாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜயும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
Finally #YSJagan #ThalapathyVijay𓃵
My Leader’s 🩵🩵🩵 I’m the happiest person Right now 🩵🩵🩵🩵 pic.twitter.com/E8aKtKZGH0— Colour Karthik (@TheriKa33253466) February 8, 2026
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அவர் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
Finally 🔥🔥🔥🔥🔥.#TVKVijay #YSJagan #TVK https://t.co/jqu0kYxhz0 pic.twitter.com/42ToGLlmBR
— Sathish ✨💫 (@S_A_T_H_I_S_H_S) February 8, 2026
ஏனெனில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு என விஜய் அறிவித்த நிலையில் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்தால் அவர்களது பலம் மீண்டும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஜகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டது தற்போது அரசு வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் சூர்யா கார்த்தி ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.

