ஸ்மார்ட்போன் மோகத்தால் ஒரு சிறுமி செய்த விபரீதச் செயல் ஒட்டுமொத்த இணையதளத்தையே அதிரவைத்துள்ளது. அந்தச் சிறுமி யாரிடமும் பேசாமல், தொந்தரவு இல்லாமல் போன் பயன்படுத்துவதற்காகத் தன்னைத்தானே அறைக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் பெற்றோர் கதவைத் தட்டியும், கெஞ்சியும் அந்தச் சிறுமி கதவைத் திறக்கவே இல்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், வேறு வழியின்றி அந்த அறையை ஒட்டியிருந்த சுவரை ஆட்களை வைத்து இடித்துத் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே நுழைந்து அந்தச் சிறுமியை மீட்டனர்.

​இந்தச் அதிர்ச்சிகரமான சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது ‘எக்ஸ்’ (X) வலைதளத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சுவரை உடைக்கும் அந்தப் பதற்றமான காட்சிகளும், மீட்கப்பட்ட சிறுமியின் நிலையும் பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. டிஜிட்டல் சாதனங்களுக்குக் குழந்தைகள் எந்த அளவுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. குழந்தைகளிடம் போன் கொடுப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த வைரல் வீடியோ மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.