ஆசை ஆசையாய் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா. இவர் சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் நடித்த பிளாக் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து தற்போது பா.விஜய் இயக்கியுள்ள படம் அகத்தியா. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இது ஒரு பேய் படம்.   இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று பட குழு அறிவித்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் ரிலீஸ் தள்ளி போனது. பின்னர் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்தது. இந்த படத்தின் முதல் பாடலான காற்றின் விரல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலுக்கான வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார். இதனையடுத்து தற்போது இளையராஜாவின் பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலை ரீகிரியேட் செய்துள்ளார்கள். இந்த பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.