அயோத்தியில் அசைவ உணவுகளை விற்க தடை விதித்து கேஎஃப்சி நிர்வாகம் புதிய கிளைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு அருகில் ஒரு கடையை திறக்க KFC-க்கும் அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அனுமதியுடன் ஒரு நிபந்தனையையும் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இறைச்சி பொருட்களை விற்க தடை விதித்தும், சைவ உணவுகளை மட்டும் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் KFC ஒரு யூனிட்டைத் தொடங்கியுள்ளது. அயோத்தியில் உள்ள கோவிலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் அசைவ உணவுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.