இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு அரசு மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கும் நிலையில் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும். இதனால் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அகலவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும். அதே சமயம் ஏப்ரல் மாத டிஏவும் இதில் சேர்க்கப்படும்.

புதிய சம்பள விகிதத்தில் ஊதிய குழுவின் படி அகலவிலைப்படி கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் ஆகும். இந்த அகலவிலைப்படி உயர்வால் மொத்த டி ஏ வில் 774 ரூபாய் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் அடிப்படை சம்பளம் 56 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்படும் நிலையில், இந்த ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்வு காரணமாக மொத்த டி ஏ வில் 2276 ரூபாய் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.