இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்குப் பின் மன்னர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அவருடைய மனைவியான கமிலா ராணி குயின் கன்சார்ட் பட்டம் பெற்றார். இதன் பிறகு இருவரும் இணைந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நான் கமிலாவுக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அரண்மனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது “75 வயதான ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார். மேலும் அங்கு நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள முடியாததால் வருத்தம் அடைந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.